கண்ணீருடன் தினகரன் ஆறுதல்.. தினகரனை தொடர்ந்து கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ஆறுதல்..

இராமநாதபுரம் சிதம்பரம் பிள்ளை ஊரணியில் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி மர்மநபர்களால் வெட்டப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை காண வருகைதந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரையும்,  அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி கண்கலங்கினார். இவருடன் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன்,மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், எம்.எல்.ஏக்கள்  தங்கதமிழ்செல்வன், முத்தையா, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகன், நடிகர் செந்தில், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கவிதா, மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் முத்தீஸ்வரன், முத்துசெல்வம், கீழக்கரை நகர்செயலாளர் கே.ஆர்.சுரேஷ், கே.ஜி.பாலமுருகன், முனிஸ்வரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சி சார்பாக கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ராவியத் காதரியா தாக்குதலுக்கு ஆளாகப்பட்ட தவமுனியசாமியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..