தமிழக மக்களுக்கு ஆதரவாக அறப்போராட்டம் நடத்த இலங்கை முதல்வருக்கு கருணாஸ் வேண்டுகோள்..

தமிழக மக்களுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இலங்கையில் அறப்போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனிடம் நடிகர் கருணாஸ் வேண்டுகோள்.

திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் இலங்கைக்கு சென்று இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனை சந்தித்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்க்கு அழைப்பு விடுப்பதற்க்காக சென்றுள்ளார்.

தமிழகத்தில் இருக்கும் ஈழச்சிறுவர்களுக்கு கல்வி மிகப்பெரிய கேள்விகுறியாக உள்ளது. எனவே அவற்றை கருத்தில் கொண்டு தமிகழத்தில் இலங்கை அகதிகளின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கல்லூரி ஒன்றை நடிகர் கருணாஸ் தொடங்க உள்ளார். இந்நிலையில் அவர் தொடங்கப்பட உள்ள கல்லூரிக்கு அடிக்கல்நாட்டு விழாவிற்கு இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுப்பதற்க்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்தார். கல்லூரிக்கு பூமி பூஜை செய்யும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போராட்டத்திற்க்கும், மற்றும் ஆந்திராவில் சுட்டுகொள்ளப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கண்டண அறிக்கையை வெளியிட்டார், அதே போன்று தற்போதும் தமிழகத்தில் நிலவி வரும் காவிரி பிரச்சனைக்கு உலக தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாகவும், கோரிக்கையாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இலங்கையில் அறப்போராட்டம் நடத்த வடக்குமாகாண முதல்வர் விக்னேஷ்வரன் முன்வர வேண்டும் என நடிகர் கருணாஸ் யாழ்ப்பணத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெற உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்குச் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளதாக கருணாஸ் தெரிவித்தார்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..