இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜம்போ சர்க்கஸ் – புதிய தொழில்நுட்பத்தில்..

இராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகே கீழக்கரை ரயில்வேகேட் சாலையில், புதிய தொழில்நுட்பத்தில் கேரளாவைச் சேர்ந்த கலைஞர்களால் ஜம்போ சர்க்கஸ் கடந்த மார்ச்., 23 முதல் நடந்து வருகிறது. இந்த சர்க்கஸ் பொதுமக்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் கண்டு ரசிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த சர்கஸை கேரளா, கண்ணூரை சேர்ந்த சர்க்கஸ் உரிமையாளர்கள் அஜய் சங்கர், அசோக் சங்கர் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். சர்கஸின் உரிமையாளர்கள் கூறியதாவது, “ஆப்பிரிக்கன், எத்தியோப்பியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்க்கஸ் கலைஞர்களை வரவழைத்து இருக்கிறோம். கேரளா, நேபாளம், அஸ்ஸாம் மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களின் ஜிம்னாஸ்டிக், குதிரையேற்றம், அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுதல், 25 அடி உயரத்தில் கூடைப்பந்து போடுதல்,நாய்களின் அணிவகுப்பு, பஞ்சவர்ணக்கிளி, ஆஸ்திரேலியன் கிளிகளின் சாகசம் மற்றும் ரப்பர் போல் வளையும் தென்ஆப்பிரிக்கா யோகா, இரும்பு கூண்டுக்குள் பைக் ரேஸ் முதலியவை இடம்பெறுகிறது.

தற்போது கோடை காலமாக உள்ளதால்,வாட்டும் வெயிலை கணக்கில் கொண்டுதிங்கள் முதல் வெள்ளி வரைமாலை 4, இரவு 7 மணிக்கு இருகாட்சிகளும், சனி மற்றும் ஞாயிறுகளில் பிற்பகல் 1, மாலை 4, இரவு 7 மணிக்கும் சர்க்கஸ் நடந்து வருகிறது.


ஒவ்வொரு காட்சியிலும் புதுமையாக செய்ய முயற்சித்து வருவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும், உற்சாகமும் ஏற்படுகிறது என்றனர். இந்த சர்கஸ்  வருகிற ஏப்., 15 வரை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.