திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கீழக்கரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்…l

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பாக நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நகர் துணைச்செயலாளர்கள் ஜமால் பாரூக், என்.பி.கே கென்னடி, நகர் இளைஞரணி முத்துவாப்பா, நகர் மாணவரணி அமைப்பாளர் ஹமீது சுல்த்தான், நகர் மாணவரணி துணை அமைப்பாளர் இப்திகார் உசேன், நகர் செயற்குழு எஸ்.கே.வி.முகம்மது சுஐபு, கோவிந்தன் மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழக்கரை காவல் ஆய்வாளர் திலகவதி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.