கீழக்கரையிலும் அரபு நாட்டு புகழ் ஹிஜாமா மருத்துவ முகாம்..

கீழக்கரை மேலத்தெரு பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹா வளாகத்தில் மூன்று நாட்கள் ஹிஜாமா மருத்துவ முகாம் நடைபெறுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இம்முகாம் இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.

ஹிஜாமா என்றால் என்ன?
ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).

ஆயுர்வேத ரக்த மோக்ஷனம் என்றால் என்ன ?
ஆயுர்வேதத்தில் சோதன சிகிச்சை என்னும் பஞ்ச கர்ம சிகிச்சை முறையில் நவீன அறுவை சிகிச்சையின் தந்தையுமான ஆயுர்வேத ஆச்சார்யார் சுசுருதர் அவர்கள் பரிந்துரைக்கும் ரக்த மோக்ஷனம் என்னும் இரத்தம் வெளியேற்றும் சிகிச்சையும் இதுவும் ஒன்று தான்.


எந்த நோய்களுக்கு ஹிஜாமா தெரபி நல்ல பலன் தரும் ?

தாங்க முடியாத வலிகள் ,வீக்கம் , மூட்டு வலிகள் ,கழுத்து, முதுகு எலும்பு தேய்மானம் ,தண்டுவட நோய்கள் , டிஸ்க் பிரச்னைகள் கௌட்,முடக்கு வாதம் ,தலை வலி ,மைக்ரைன் , மார்பக கட்டிகள் ,கருப்பை கட்டிகள் ,கேன்சர் ,பெயர் தெரியாத கட்டிகள் ,அலோபீசியா என்னும் வழுக்கை ,தைராய்ட், ஹார்மோன் கோளாறுகள் ,உடல் பருமன் ,உயர் இரத்த அழுத்தம் ,பக்க வாதம் வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டு ,ஆண்மை குறைவு ,தூக்கமின்மை ,மன அழுத்தம் ,நரம்பு தளர்ச்சி, ஆறாத புண் , ,புகை பழக்கம் ,குடிநோய், தோல் நோய்கள் போன்ற நோய்களுக்கு இந்த ஹிஜாமா , கப்பிங் தெரபி ,கெட்ட இரத்தம் வெளியேற்றும் பஞ்ச கர்ம சிகிச்சை நல்ல பலன் தரும் .

முக்கிய குறிப்பு:- இது ஒரு தகவலுக்கான செய்தி மட்டுமே, இம்மருத்துவத்தை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு தனி மனிதரின் விருப்பத்திற்கு உட்பட்டது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image