தினகரனின் வெற்றி-அரசியல் கட்சிகளின் தப்புக் கணக்கும் .. மக்களின் மன நிலையும்..

தமிழகத்தில் பொதுவாக அதிமுக அரசை புறக்கணிக்க நினைக்கும் தமிழக மக்கள் திமுக தான் மாற்றாக இருக்க முடியும் என்ற மனோநிலையில் இருந்து வந்தார்கள்.

ஆனால் தற்போதய அரசியல் சூழலையும்,ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகளையும் வைத்து பார்க்கும் போது மாற்று சக்தியாக இருந்து வந்த திமுக வலிமை இழந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மத்திய,மாநில அரசின் நெருக்கடிக்கு அசைந்து கொடுக்காமல் அதனை எதிர்த்து போராடுவதன் மூலம் மாற்று அரசியலுக்கான வெற்றிடத்தை டிடிவி தினகரன் மெல்ல மெல்ல நிரப்பி வருகிறார்.அதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறார் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.

அதிமுக அரசு இரட்டை இலையை மீட்டெடுத்தப் பிறகு நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுத்தது. அதே வேளையில் திமுகவும் தன் பலத்தை நிரூபிக்க  வேண்டும் அதற்கான சரியான தருணம் என்பதால் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திகழ்ந்தது. ஏனென்றால் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று  நிலை கருத்து கணிப்பு வெளிந்ததால் எதிர்க்கட்சியான திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இத்துனை கடுமையான போட்டிக்கு மத்தியில் சியேட்ச்சை வேட்பாளராக களம் காணும் டிடிவி தினகரனுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு சவாலாகவும்,அரசியலில் வாழ்வா? சாவா? என்ற நிலை உருவானதால் அவர் தொய்வின்றி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அதன் விளைவாக நட்சத்திர தொகுதியாக விளங்கிய ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதோடு அவரே வெற்றி பெருவார் என்று நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக அரசிலில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும் என்றக் கருத்து நிலவி வந்தாலும்,வாழ்வில் மாற்றம் வருமா? என்ற ஏக்கத்தோடு சாமானிய மக்கள் எண்ணுகிறார்கள் என்பதே நிதர்சனம்.

1 Comment

Comments are closed.