குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை..

இன்று (23-12-2017) விமானம் மூலம் டெல்லியிருந்து மதுரை வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

குயரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு வரவேற்பளிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜி, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராக், மதுரை மாநகர் காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பளித்தனர். பின்னர் குடியரசுத் தலைவர் , ஆளுநர், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் உதயகுமார் ஆகியோரும் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றனர்.

மண்டபம் வந்த குடியரசு தலைவரை இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் மணிகண்டன் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ‌கியோ‌ர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்