கீழக்கரை வடக்குத் தெரு பிரதான சாலையின் அவல நிலை… நேரடி வீடியோ ரிப்போர்ட் ..

கீழக்கரை வடக்குத் தெரு 18,19,20 மற்றும் 21 வார்டுகளை உள்ளடக்கிய, பிரதான சாலைகளை கொண்ட முக்கிய தெருவாகும். இச்சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் முதல் பொதுமக்கள் வரை சென்று வருகிறார்கள்.

இச்சாலையில் சாக்கடைகள் ஓடும் வாருகால் மூடிகள் உடைந்து சாலையில் சாக்கடை வெள்ள பெருக்காக ஓடுகிறது. நேற்று ஒரு குழந்தையும் அக்குழியில் விழுந்து, அதிர்ஷடவசமாக காப்பாற்றபட்டுள்ளார்.

இதற்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கிறார்கள்.