கீழக்கரையில் அலட்சியமாக தூக்கி எறியப்பட்டு கிடக்கும் ஹைமாஸ் தெரு விளக்குகள்..

கீழக்கரையில் பல இடங்களில் பெயரளவில் ஹைமாஸ் விளக்கு அதிகமான இடத்தில் இருந்தாலும் பயன்பாட்டில் இருப்பது சிலவை மட்டும்தான். முக்கியமான பகுதிகளில் விளக்குகள இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். உதாரணமாக கிழக்குத் தெரு ஜமாத் பள்ளி அருகில் உள்ள ஹைமாஸ் நீண்ட நாட்களாக எறிவது இல்லை, அதே போல் அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக கமுதி பால்கடை அருகில் இருந்து எடுக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு கடற்கரையில் நிறுவப்படும் என்று கீழக்கரை ஆணையரால் பல முறை வாக்குறுதி அளித்தும் இன்று வரை கடற்கரை ஓரமாக மழை மற்றும் வெயில் காலங்களில் வீணாகபோகின்றது. இது சம்பந்தமாக முறைப்படுத்த சமூக ஆர்வலர்கள் பல கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு கேட்பாரற்று பழுதாகிப்போகும் இந்த ஹைமாஸ் விளக்கை, கீழக்ககரை கடற்கரை ஓரமாக அரசு அமைத்துள்ள நடைபாதையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அமர ஏற்பாடு செய்துள்ள இடத்தில் நிறுவினால், இரவு நேரத்திலும் பொதுமக்கள் அச்சமில்லாமல் அப்பகுதிக்கு செல்ல முடியும். கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மக்களின் துயரத்தை மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா?

2 Comments

  1. மிக முக்கியமான செய்தி இது மேலும் இவர்கள் குறிப்பிட்ட இந்த இடம் தற்பொலுது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் அதிகளவில் வந்து பொழுதுபோக்குகிறார்கள் கீழக்கரை நகராட்சி இதை ஆவண செய்யுமா இல்லை அசட்டை செய்யுமா? நன்றி கீழை செய்திக்கு

Leave a Reply

Your email address will not be published.