தேங்கும் மழைநீருக்கு நிரந்தர தீர்வு காணுமா நகராட்சி.. ஒரு நேரடி பார்வை..

கீழக்கரையில் முக்கியமான தெருக்களில் ஒன்று NMT தெரு என்றழைக்கப்படும் நெய்னா முகம்மது தண்டல் தெரு. ஆனால் இங்குள்ள சிறிய தெருவில் சின்ன மழைக்கும் மக்கள் நடமாட முடியாதபடி மழைநீர் தேங்கி விடும். பின்னர் நகராட்சி லாரி மூலம் நீரை அகற்றவது ஒரு தொடர் நிகழ்வு.

ஆனால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதம் அத்தெருவில் உள்ள பள்ளத்தை சரி செய்து நிரந்தர சாலை அமைத்தால் தீர்வு ஏற்படும், ஆனால் அதை செய்ய நகராட்சி முனைப்பு காட்டுவதில்லை. ஆனால் மறுபுறம் தொடந்து வாகனச்செலவு அதிகமாகிறது என்ற நகராட்சி ஆணையாளர் குற்றச்சாட்டு. ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தொலைநோக்கு பார்வையுடன் நிரந்தர திட்டம் போட்டால் அரசு பணம் வீணாவதையும் தடுக்கலாம், மக்கள் பிரச்சினைக்கும் விடிவுகாலம் பிறக்கும். நகராட்சி சிந்திக்குமா??