தீவிரவாதி என்று ஆசிரியர்கள் சித்தரித்ததால் “நான் தீவிரவாதி அல்ல நான் ஒரு மாணவன்” என்று முதல்வரிடம் கூறிய தற்கொலைக்கு முயற்சித்த முஸ்லிம் மாணவன்.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள டெல்லி பப்லிக் ஸ்கூலில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவன்  முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் சக மாணவனுக்கு மத்தியில் தீவிரவாதி என்று தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டதால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த செப் 23 ஆம் தேதி அன்று இரவு அந்த மாணவன்  தற்கொலைக்கான காரணத்தை உ.பி. முதல்வர்  யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட பிறகு கவலைக்கிடமான நிலையில்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். உடனே இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகார் அளித்ததன் பேரில் 305 பிரிவின் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மற்றும் 4 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுய நினைவு திரும்பியவுடன் இது குறித்து மாணவன் கூறுகையில்: ஒவ்வொரு நாளும் என் பை சோதனை செய்யப்படுகிறது,நான் பின் வரிசையில் அமர வைக்கப்படுகிறேன், என்னோடு மற்ற மாணவர்கள் பேசக்கூடாது, அது மட்டுமல்லாமல் நான் ஏதாவது கேட்டால் ஆசிரியர்கள் என்னை வெளியேற்றுகிறார்கள். இவற்றை எல்லாம் காணும் மற்ற மாணவர்கள் என்னை முற்றிலும் ஒதுக்க ஆரம்பித்து விட்டதாகவும், “நான் தீவிரவாதி அல்ல நான் ஒரு மாணவன்” என்று உபி முதல்வரிடம் கூறிய போது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. எந்த முஸ்லிம் மாணவனுக்கும் இது போன்ற நிலைமை வரக்கூடாது என்று பெற்றோர்கள் அப்போது கூறினர்.

அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி காஸியாபாத்தில் உள்ள பிரிமியர் நர்சரி பள்ளியில் புதிதாக சேர்ந்த நான்கு வயது சிறுவன் மற்றொரு மாணவன் பக்கத்தில் முஸ்லிம் என்ற காரணத்தால் உட்கார மறுத்து விட்டான். உடனே பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை அழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர் என்ற செய்தியும் தீயாக பரவியது. ஜாதி,மதமங்களை கடந்து செயல்பட வேண்டியவர்கள் மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையை சிதைத்து துவேஷத்தை விதைக்கும் சில ஆசிரியர்கள் இருக்கும் வரை நம் நாட்டில் வளர்ச்சி என்பது கானல் நீர் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.