பொதுமக்களை ஏமாற்றும் மொபைல் நிறுவன ஏஜெண்டுகள்..

கடந்த சில மாதங்களாக மொபைல் சிம் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் இல்லையென்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி வந்த வண்ணம் உள்ளது. அத்துடன் வரும் கூடுதல் தகவல் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எந்த கட்டணமும் இல்லை என்பதுதான். ஆனால் இந்த குறுஞ்செய்தியை நம்பி உள்ளூரில் உள்ள ஏஜென்டுகளை நாடினால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆதார் எண் இணைப்புக்கு எந்த விளக்கமும் தராமல் ரூபாய் 30 முதல் 50 வரை சேவைக்கான கட்டணம் என்று ரசீது இல்லாமல் கொள்ளையடிக்க முற்படுகிறார்கள்.

இன்று கீழக்கரையில் ஏர்டெல் ஏஜென்டால் ஏமாற்றப்பட்ட ஒருவர் வீடியோவுடன் முகப்புத்தகத்தில் பதிந்துள்ளார். மொபைல் சேவையை உபயோகப்படுத்தும் மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்களா?? அல்லது கிடைக்கும் வழியில் எல்லாம் மக்களிடம் சுரண்ட நினைக்கிறார்ரகளா?? இதை அரசும், அரசு அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு மக்களை இந்த சந்தர்ப்ப வாத கொள்ளயர்களிடம் இருந்து காப்பார்களா??

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் வெவ்வேறு நிறுவன மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வழிமுறையும் உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கமும் உள்ளது.

Link Aadhar Card With Mobile Number : Idea, Airtel – Full Process