மாட்டின் மீது இரக்கம் காட்டும் இதயம் மனிதன் மீது இல்லை-நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்

மாட்டின் மீது இரக்கம் காட்டும் போது என் பெயரில் இரக்கம் இல்லை (Not In MyName) என்று பதாகைகள் ஏந்தி சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொலைச் சம்பவங்களுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தலை நகர் டில்லியிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களில் 28 பேருக்கு மேல் கொன்று குவித்திள்ள சங்பரிவார் கும்பல் இன்னும் எத்தனை பேரை கொன்று குவிக்க உள்ளதோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் பற்றியுள்ளது.

இந்த போராட்டம் சமூக வலைதளம் மூலமாக ஒருங்கினைக்கப்பட்டு நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது. சமீபத்தில் ஹரியான மாவட்டம் பல்லாப்கர் பகுதியை சார்ந்த ஜுனைத் (வயது 15) என்பவர் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டர். தொப்பி அணிந்து இருந்த ஜுனைத் என்பவரை ஏளனமாக திட்டுயதோடு மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி உண்ணக்கூடியவர் என்று கூறி கடுமையாக தாக்கி ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் தீயாகப் பரவியதை தொடர்ந்து மாட்டுக்காக மனிதர்கள் கொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்த சமூக ஆர்வலர்கள் மாட்டின் மீது இரக்கம் காட்டும் இதயம் மனிதர்கள் மீது இரக்கம் கட்டவில்லையே என்று வட மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் சமீபத்தில் தமிழ் நாட்டை சார்ந்த  பழனியிலும்  இந்த போராட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.