இராமநாதபுரம் கேணிக்கரை பெண்கள் தொழுகைப் பள்ளி மீது கல்வீச்சு – பதட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை தங்கப்பா நகர் பெண்கள் பள்ளி மீது ரமலான் மாத இரவு நேரத் தொழுகை தொடங்கிய பொழுது பெண்கள் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை தங்கப்பா நகரில் பல வருடங்களாக பெண்கள் தொழுகைப் பள்ளி வீட்டில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு சொந்தமாக நிலம் வாங்கப்பட்டு அப்பகுதியில் பெண்கள் தொழுகைக் கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நாள் முதலே ஜாதிக் கட்சியினர் காழ்ப்புணர்ச்சியுடன் அப்பகுதியில் பள்ளிவாசல் அமைக்க கூடாது என்று பல முறை புகார் மனுக்கள் செய்தனர். ஆனால் அப்பகுதியில் 200கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் இருந்ததால் அப்புகார்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ரமலான் மாதத்தை எண்ணத்தில் கொண்டு இன்று தொழுகை நடத்த காவல்துறை அனுமதியுடன் தொடங்கினர். ஆனால் இதையறிந்த சமூக விரோதிகள் தொழுகை தொடங்கிய உடனே பெண்கள் மீது கல்வீச்சு நடத்தியுள்ளனர். இக்கல்வீச்சில் பல பெண்கள் பல பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆனால் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தும் காவல்துறை சரியான நேரத்தில் பாதுகாப்பு கொடுக்கப்படாததால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக அறியப்படுகிறது. ஆனால் அருகில் இருந்த இஸ்லாமிய சமூக அமைப்பு நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பள்ளிவாசல்களின் கதவுகளை அடைத்ததால் அதிகப்படியான சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்துடன் வேறு அசம்பாவித சம்பவத்தையும் இணைத்து மதக்கலவரமாக உருவாக்க இருந்த சதியை அறிந்து கொண்டு இஸ்லாமிய அமைப்பினர் அமைதியாக கலைந்து சென்றுள்ளனர். ஆனாலும் ஜாதிக் கட்சியினர் பரபரப்பை ரமலான் மாதத்தில் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியை சீர்குலைக்க முனைந்துள்ளார்கள். இச்சம்பவம் இராதமநாதபுரம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.