கீழக்கரை தாலுகாவில் முதியோர் உதவித் தொகை தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது..

கீழக்கரை தாலுகாவில் கடந்த இரண்டு மாதமாக முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் பற்றிய ஆய்வு கீழக்கரை தாசில்தார் மற்றும் அரசு ஊழியர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அச்சமயத்தில் பல தகுதியில்லாத நபர்கள் உதவித் தொகை பெறுவது கண்டறியப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து கீழக்கரை வட்டம் கீழக்கரை பிர்கா காஞ்சிரங்குடி குரூப் கஸ்தூரிபுரம் கிராமம் மற்றும் வடக்குத் தெரு பகுதிகளில் பயனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தொடர்பாளர் நாகராணி மூலம் வழங்கப்பட்டது.

கஸ்தூரிபுரத்தில் மாற்றுத் திறனாளி முருகன் மற்றும் காஞ்சிரங்குடி வடக்குத் தெருவைச் சார்ந்த விதவை பெண்மணி பால ஆமினாம்மாள், மரிய ஆயிசா பீவி ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித் தொகைகள் கீழக்கரை தாசில்தார் தமீம்ராசா முன்னிலையில் வழங்கப்பட்டது.