கீழக்கரையில் மாடு அறுக்க தடை விதித்த மத்திய அரசையும், அதற்கு துணை போகும் மாநில அரசையும் கண்டித்து போராட்டம் அறிவிப்பு …

கடந்த மாதம் மத்தியில் ஆளும் ப.ஜ.க அரசு மாட்டை வியாபார நோக்கத்துடன் விற்பதற்கும், இறைச்சிக்காக வெட்டுவதற்கும் தடை விதித்தது. இச்செயல் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்த வண்ணம் உள்ளளர்.

இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசையும், அச்சட்டத்தை கண்டிக்காமல் மெளனம் சாதிக்கும் தமிழக அரசையும் கண்டித்து தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கீழக்கரையில் 12-06-2017 அன்று மாலை 04.00 மணி முதல் 05.30 மணி வரை முஸ்லிம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செய்துள்ளனர். இந்த கண்டன ஆர்பப்பாட்டத்திற்கு தி.மு.க நகரச் செயலாளர் S.A.H.பசிர் த்லைமை வகிக்கிறார் மற்றும் அனைத்து தோழமைக் கட்சியினரும் முன்னிலை வகிக்கிறார்.