கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் வேன் மோதி விபத்து..

இன்று (28/05/2017) கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மீது தனியார் வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த மூன்று மாணவிகள் மற்றும் இரு வாகனத்தின் ஓட்டுனர்களும் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். மேலும் இச்சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.