கீழக்கரையில் சூறாவளிக் காற்று இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

கீழக்கரையில் இன்று (18-05-2017) மதியம் தொடங்கி பலத்த காற்று வீச ஆரம்பித்தது. காற்று வீசியதால் மின்சார வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டது. இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் மிகவும் அவதிக்குள்ளானர்கள்.

கோடைகால விடுமுறையாக இருப்பதால் அநேகபேர் குடும்பத்தினருடன் அருகிலுள்ள கடற்கரை சுற்றுலாதளங்களுக்கு சென்றிருந்தனர், ஆனால் தூசியுடன் காற்று வீசியதால் பாதியிலேயே குடும்பத்தினரும், சிறுவர்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.