கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவி..

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தின் 16-05-2017 அன்று ஜமாபந்தி நடைபெற்றது. அன்று இராமநாதபுரம் வட்ட கோட்டாட்சியரால் பத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு அரசாங்க உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் விதவை உதவித் தொகை, இந்திராகாந்தி முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, இயற்கை மரண நிவாரனம், திருமண உதவித் தொகை ஆகியவைகள் பல பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தாசில்தார் தமீம்ராசா மற்றும் தாலுகா அலுவலகர்கள் அனைவரும் உடனிருந்தனர்.