தகுதியில்லாமல் அரசு உதவித் தொகை பெறும் நபர்களை கண்டறிய தாசில்தார் தலைமையில் ஆய்வு…

தமிழகத்தில் பல துறைகளில் தகுதியில்லாமல் அரசு பலன்களை பலர் அனுபவித்து வருகிறார்கள். அதைத் தடுக்கும் வகையில் சமீபத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டு, தகுதியற்றவர்கள் பெற்று வரும் உதவித் தொகைகளை ரத்து செய்து தகுதி உள்ளவர்களுக்கு வழங்கிட வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் நடராசன் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் அடிப்படையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர். சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கிய அறிவுரையின் அடிப்படையில் கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கீழக்கரை சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் கே.எம் தமீம்ராசா தலைமையில் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி இன்று(10-05-2017) தொடங்கியது.

மேற்படி களப் பணிகளில் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் கோகிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் முனிஸ்வரன், கோகிலாதேவி மற்றும் கிராம உதவியாளர்கள் பாக்கியவதி, பாண்டி ஆகியோர் உடன் இருந்து ஆய்வு பணி செய்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.