கீழக்கரையில் பாலிதீன் பைகள் உபயோகம்-நகராட்சி அதிரடி சோதனை..

கீழக்கரை நகராட்சியின் எல்லைக்குள் பாலதீன் பைகளை உபயோகம் செய்யவும், விற்கவும் தடை செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியால் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறி பல வியாபாரிகள் பக்கத்தில் உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாங்கி வந்து உபயோகிக்கும் போக்கை கடை பிடித்து வந்தனர். அதை தடுக்கும் விதமாக இன்று நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் பல வியாபார தலங்களில் சோதனையில் ஈடுபட்டனர். விதியை மீறி பாலிதீன் பை உபயோகம் செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததுடன், பாலிதீன் பொருட்களை பறிமுதலும் செய்தனர்.

சுற்றப்புற சூழலைக் கருத்தில் கொண்டு வியாபாரிகள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.