இன்று ‘ஏப்ரல் 30 ‘ – குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பெற்றோர்கள் மறந்துடாதீங்க…

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மறக்காமல் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்குமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 43,051 சொட்டுமருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கீழக்கரை நகரில் பெரும்பாலான பள்ளி கூடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சொட்டுமருந்து வழங்கும் மையங்கள், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கடந்த 2-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை, இன்று சொட்டுமருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டுமருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image