கீழக்கரையில் தேங்காய் விலை கிடு கிடு உயர்வு..மக்கள் அவதி..

இராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் மணிமகுடமாய் விளங்கியப்பகுதி கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் ஆகும்.மாவட்டத்தில் கீழக்கரை, பெரியபட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் விலையும் தேங்காய்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் காயவைக்கப்படும் கொப்பரைக்கும் தமிழகத்தின் எண்ணெய் தொழிற்சாலைகளில் நல்ல வரவேற்பு இருந்தது.


தற்போது மாவட்டத்தில் போதிய மழை இல்லாதாலும், பெரும்பான்மையான நீர் நிலைகள் அழிக்கப்பட்டதாலும், தென்னந் தோப்புக்கள் அழிக்கப்பட்டு வீட்டு நிலங்களாக மாற்றப்பட்டு வருவதால் தென்னை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்து நான்கு வருடங்களுக்கு முன் எண்ணிக்கை முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய்கள் கடந்த சில வருடங்களாக கிலோ அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன் 1 கிலோ குடுமி உள்ள தேங்காய் 12 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக விலை கடுமையாகி தற்போது 1 கிலோ தேங்காய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


இதனால் பொது மக்களும்,தேங்காய் வியாபாரிகளும் மற்றும் குடிசை தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேங்காய் வியாபாரம் செய்யும் சிந்துபாத் ஹபீப் கூறுகையில் தேங்காய் விற்பனை விலையை கட்டுப்படுத்த அரசு முன்வரவேண்டும் என்றார்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image