Home செய்திகள் கீழைநியூஸ் சார்பாக அனைவருக்கும் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துகள்.. பொங்கல் பண்டிகை யின் உண்மை பொருள் என்ன ?

கீழைநியூஸ் சார்பாக அனைவருக்கும் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துகள்.. பொங்கல் பண்டிகை யின் உண்மை பொருள் என்ன ?

by mohan

பொதுவாக தமிழர்களின் விழாக்கள் அனைத்தும் சித்தர்கள் , கடவுளை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறியீடுகளாக (MAP) சொன்னதுதான் பண்டிகை ஆகும் .அந்த வரிசையில்தான் பொங்கல் பண்டிகையும் ,அதன் உண்மை பொருளும் !

1) “போகி பண்டிகை “
====================
போகம் என்று சொல்ல கூடிய மண் ஆசை,பெண் ஆசை ,பொன் ஆசை ,இவற்றை ஒழித்து ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் .அதாவது போகத்தை நீக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தவே போகி பண்டிகை .

2) “சூரியன் பண்டிகை “
===================
நம் உடலில் உயிர் மூச்சானது சந்திர கலையாகவும் ,சூரிய கலையாகவும் ,சுழிமுனையாகவும் ஓடி கொண்டு இருக்கிறது .இப்படி பிரிந்து ஓடுகின்ற சூரிய மற்றும் சந்திர கலையை சுழி முனையில் ஒரு கலையில் செலுத்தினால் ,அந்த மனிதன் மரணம் தவிர்த்து கடவுளை அடைய முடியும் என்பது சித்தர் கண்ட மார்க்கம்.

“சங்கி ரண்டு தாரை ஓன்று சன்னல் பின்னல் ஆகையால் மங்கி மாளுதே உலகில் மானிடர்கள் எத்தனை சங்கி இரண்டையும் தவிர்த்து தாரை ஊத வல்லீரேல் கொங்கி பங்கி மங்கையரோடு கூடி வாழலாகுமே “.என்று கலைகளின் இயக்கத்தை மாற்றி சுழிமுனையில் செலுத்த வேண்டும் அப்படி செலுத்தினால் கடவுளோடு சேர்ந்து வாழலாம் என்று மேற்கண்ட சித்தர் பாடல் கூறுகிறது .ஆதலால் சூரிய சந்திர கலைகளை நினைவு படுத்தவே சூரியன் பண்டிகையாக வைக்கப்பட்டது .

3) “மாட்டு பொங்கல் “
=================
மாட்டு பொங்கல் என்பது, நம் தமிழர்களின் சடங்குகளில் பசு மாட்டை தான் நாம் பெரும்பாலும் வழிபாடு செய்வோம் .பசு என்பது சித்தர்களின் பரிபாஷையில் ஆன்மா என்று பொருள் .அதனால் தான் புது வீடு குடி போகும்போது பசுவை வீட்டினுள் நிறுத்தும் பழக்கம் நம்மிடையே இருக்கிறதின் பொருள் அதான் ,,அதாவது வீடு என்ற இந்த உடம்பில் பசு என்ற ஆன்மாவை நிறுத்தி வைக்க வேண்டும். உடம்பை விட்டு ஆன்மா பிரியாமல் கடவுளை சேரனும் என்று காட்டவே அந்த பழக்கம் ஏற்படுத்தப்பட்டது ,பொருள் தெரியாமல் 5 அறிவு உள்ளு பசுமாட்டை வீட்டினுள் நிறுத்தி வருகிறோம் .பசு என்ற ஆன்ம தன்மையை அடையவேண்டும் என்று நினைவுபடுத்தவே மாட்டு பொங்கல் பண்டிகை. அதாவது போகத்தை ஒழித்து ,சூரிய சந்திர கலையை மாற்றினால் பசு என்ற ஆண்மை தன்மையை பெற்று விட முடியும் என்பதை காட்டவே இந்த மாட்டு பொங்கல் பண்டிகை .

4) “காணும் பொங்கல் “
=========================
போகத்தை ஒழித்து ,கலைகளை மாற்றி பசு என்ற ஆன்ம தன்மையை பெறும்போது அந்த மனிதன் பேரின்பத்தை கண்டு பால் போன்று வெண்மை அதாவது மும்மலம் அற்று சுத்தமான நிலைய அடைவான், ஆனந்தம் பொங்கும் அவனிடம் ,அதான் ஆனந்தம் என்ற “பால் பொங்கி ஆகியாச்சா ” என்று சித்தர்கள் ஒருவருக்கொருவர் கேட்டு கொள்வர் அந்த பழக்கம் இப்போதும் நம்மிடையே இருந்து கொண்டு வருகிறது.யோகம் செய்யாமல் ,கலை மாற்ற செய்யாமல் எப்படி பசு தன்மை அடைந்து ஆனந்த பொங்கும்.

“தை பிறந்தால் வழி பிறக்கும் “
=========================
இந்த பண்டிகை தை மாதம் கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால் .தை என்றால் புருவ மத்தி என்று பொருள் ,அதாவது நம் உயிர் நம் உடம்பை விட்டு செலும்போது உடம்பில் ஒன்பது துவாரம் வழியாக சென்றால் அது மரணம் பத்தவது வாசல் என்று சொல்ல கூடிய நெற்றி கண் வழியே சென்றால் அது மரணமற்ற(சமாதி நிலை ,முக்தி ) ஒரு நிலை அதற்கு ,போகத்தை நீக்கி ,கலை ரகசியம் தெரிந்து அதனை நெறி படுத்தினால் அந்த உயிர் பத்தாவது வாசல் வழியாக செல்லும் ,அப்படி நிலை பிறந்தால் அது நமக்கு கடவுள் உலகத்திற்கு வழி கிடைக்கும் பிறக்கும் என்று பொருளில் சொல்லப்பட்டது .
மேற்கண்ட யோக முறைக்கு உணவாக எடுக்க வேண்டுயதுதான் ,பாசி பருப்பு பொங்கல் உணவு ,ஆதலால்தான் பொங்கலுக்கு அந்த வகையான உணவை நாம் சமைக்கிறோம் ….பொருள் தெரியாததின் விளைவு எப்படி இப்போது பொங்கல் கொண்டாட்டம் இருக்கறது என்று நமகெல்லாம் தெரிந்த விஷயமே. .

பொலிவுடனே பொங்கட்டும்
இவ்வாண்டு பொங்கல் !

நிரந்தரமாக தங்கட்டும்
நிம்மதி சந்தோஷம் நம் அனைவரின் வீட்டில்!

பொங்கலோ பொங்கல் !!!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!