Home செய்திகள் டிக் டாக் மீதான தடை.. நிபந்தனையுடன் நீக்கம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை…

டிக் டாக் மீதான தடை.. நிபந்தனையுடன் நீக்கம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை…

by ஆசிரியர்

டிக் டாக் மீதான தடையை  நிபந்தனையுடன் நீக்கி  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக்டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வலியுறுத்தினார்.

இதனை ஏற்று உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி அதை தடை செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் சிறுவர்,சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிட கூடாது.சமூக சீர்கேட்டை உருவாக்கம் வீடியோக்களை பதவிறக்கம் செய்யக்கூடாது.பிரச்னைக்குரிய வீடியோக்களை வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். என்ற நிபந்தனையுடன் மதுரை ஐகோரட் கிளை தடையை நீக்கியது.

இதனையடுத்து டிக்டாக் தரப்பில் கூறியதாவது: ஆபாச வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றினால் போனில் டிக்டாக் தானாக செயல் இழந்து விடும்.மேலும் கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து சுமார் 6 மில்லியன் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!