Home செய்திகள் தென்காசி அருகே திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 63 வது ஆண்டு விழா- மாணவ மாணவிகள் யோகா செய்து அசத்தல்..

தென்காசி அருகே திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 63 வது ஆண்டு விழா- மாணவ மாணவிகள் யோகா செய்து அசத்தல்..

by Askar

தென்காசி அருகே திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 63 வது ஆண்டு விழா- மாணவ மாணவிகள் யோகா செய்து அசத்தல்..

தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்த ஆய்க்குடியில் திருவள்ளுவர் கழகத்தின் 63 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாவின் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவர் மேனகா மற்றும் பல்மருத்துவ சுகந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாற்றுமுறை மருத்துவர் காளித்துறை யோகாவின் வரலாறு, மருந்தில்லா மருத்துவத்தின் யோகாவின் பங்கு, என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மூச்சுப்பயிற்சி, கண் பயிற்சி ,சர்க்கரை வியாதி,தொப்பை குறைதல், ரத்த அழுத்தம், மனஅழுத்தம் இருதய படபடப்பு, பயம் போன்ற நோய்கள் வராமல் இருக்க பல்வேறு யோகாசனங்கள் செய்முறையுடன் விளக்கப்பட்டன.

புளியங்குடி தலைவன்கோட்டை பகுதியைச் சார்ந்த மாணவன் உதயகுமார் சூப்பர் பிரைன் யோகா பயிற்சி மூலம் கண்களை கட்டிக்கொண்டு பல்வேறு வகையான வண்ணங்களை கூறியும் மற்றும் அட்டைகள் விலாசம் ரூபாய் நோட்டின் மதிப்பு அவற்றின் வரிசை எண் அனைத்தையும் கூறி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஒருவருடைய சுவாசத்தை வைத்தே கண்களை கட்டிக்கொண்டு எதிரே நிற்பவர் செய்யும் செயல்களை செய்து அசத்தினார்.

இறுதியில் திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆய்க்குடி கிராமத்திலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!