Home செய்திகள் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் மழை வரவேண்டி யாக வேள்வி பூஜை..

பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் மழை வரவேண்டி யாக வேள்வி பூஜை..

by ஆசிரியர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மழை வரவேண்டி யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால் யாக பூஜை செய்து அக்கோவிலின் பூஜகர்கள் தலைமையில் அனைத்து பூஜைகளும் நடைபெற்றது.

இதில் கொன்னையூரை சுற்றியுள்ள திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் யாக பூஜையில் கலந்துகொண்டனர். மழைக்கான ராகங்களை பயன்படுத்தி மங்களவாத்தியங்கள் முழங்க அமிர்தவர்ஷிணி உள்ளிட்ட ராகத்தில் நாதஸ்வரம் கொண்டு இசைத்தனர். கோவில் தக்கார் ரமேஷ் மற்றும் செயல் அலுவலர் வைரவன் ஆகியோர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!