Home செய்திகள் உடம்பை வாளால் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா எழுமலை அருகே நடைபெற்றது…

உடம்பை வாளால் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா எழுமலை அருகே நடைபெற்றது…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது இ. கோட்டைப்பட்டி. இக்கிராமத்தில் குறிப்பிட்ட இன மக்கள் கொண்டாடும் இராமலிங்க செள டாம்பிகைஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசித் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று உடம்பை வாளால் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரம் உள்ள சாமி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அம்மன் கரகம் மஞ்சளால் உருவாக்கப்பட்டு 48 நாள் விரதமிருந்த கோவில் பூசாரியால்கர கத்திற்கு சக்தி அருள் உருவாக்கப்படுகிறது. பின்னர் பூசாரி அம்மன் கரகத்தை தன் தலையில் அமந்து சுமார் 2 கி.மீ தூரம் வரை கைகளால் தொட மாலேயே நடந்தபடியே செல்கின்றார். அவருக்கு சிரமம் ஏற்படும் போதெல்லாம் பக்தர்கள் உடம்பை வாளால் வெட்டி அம்மனுக்கு சக்தி எற்றுகின்றனர். பின்னர் கரகம் கோவிலை அடைகின்றது. இது பற்றி கோவில் பூசாரி கணேசன் கூறும்போது

ஆதிகாலத்தில் கடவுளை தங்கள் கிராமத்திற்கு அழைத்து வரும் போது சந்தேகப்பட்டு திரும்பியதால் மறைந்ததாகவும் இதனால் மீண்டும் அம்மன் சக்தியை கொண்டு வருவதற்காகவும் கிராமத்தில் நோய் நொடியின்றி மக்கள் வாழவும் வருடா வருடம் கத்தி போடும் திருவிழாவை நடத்துவதாகவும் உடம்பை வாளால் வெட்டிய போதும் அம்மன் சக்தியால் இதுவரை யாருக்கும் சிறு காயம் கூட ஏற்பட்டதில்லை எனக் கூறினார். இத்திருவிழாவில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!