Home செய்திகள் பென்னாகரம் அருகே 5 ஊர் ஓங்காலியம்மன் கோயில் திருவிழா ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன்..

பென்னாகரம் அருகே 5 ஊர் ஓங்காலியம்மன் கோயில் திருவிழா ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன்..

by ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அடுத்துள்ள ஆலாமரத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓங்காலியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீ மிதி விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். மேலும் அம்மனை 15நாட்கள் கொழுவில் வைத்து 5ஊர் இளைஞர்கள் மட்டுமில்லாமல் வெளிஊருகளி லிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சேவாட்டாம் ஆடி மகிந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று ஓங்காலியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆலாமத்தூர், சாணாரப்பட்டி, சோளிக்கவுண்டனூர், பூதநாயக்கன்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ரோணிப்பட்டி நாகாவதி ஆற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து சக்தி கரகம் அழைத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஓங்காலியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் விவசாயம் செழிக்கவும், குறைகள் விலகவும், பக்தர்கள் தீ குண்டத்தில் உப்பு கொட்டி ஓங்காலியம்மனை வழிப்பட்டனர். இந்த தீ மிதி விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டனர். மாலையில் 5ஊர் கிராம பெண்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டத்திலேயே இந்த ஊரில் மட்டும் ஓங்காலிஅம்மன் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

என். ஸ்ரீதரன் தர்மபுரி செய்தியாளர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!