Home செய்திகள் நிலக்கோட்டை போலீஸ் கான்ஸ்டபிள் தூக்கு போட்டு தற்கொலை. ..

நிலக்கோட்டை போலீஸ் கான்ஸ்டபிள் தூக்கு போட்டு தற்கொலை. ..

by ஆசிரியர்

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி சேர்ந்த முருகேசன் வயது 47. இவர் தற்போது திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபத்ரா நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலையில் பழமைவாதம் ஆக பணியாற்றி வருவதால் இவர் நிலக்கோட்டையில் குடியிருந்து வந்தார், இவரும் இவரது மனைவியும டிசம்பர் மாதம் வத்தலக்குண்டுக்கு சாமி கும்பிட வண்டியில் சென்ற போது சிறு விபத்து ஏற்பட்டது. இதில் முருகேசனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இதற்காக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கப்பட்டு வந்த நிலையில் அடிக்கடி மன அழுத்தம் உள்ளவர் போன்ற பேசி வந்ததாகவும், இதன் காரணமாக பித்து பிடித்தது போல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் வீட்டில் தற்கொலைக செய்து கொண்டார் . வேலைக்கு சென்ற சுபத்ரா வீட்டிலிருந்த கணவருக்கு பலமுறை போன் செய்தும் போனை எடுக்காததால் வீட்டிற்கு நேரில் வந்து பார்த்தபோது முருகேசன் அங்கிருந்த தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போனார். இதனைப் பார்த்த மனைவி சுபத்ரா கதறியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி உடனடியாக வந்து முருகேசனின் உடலை தூக்கில் இருந்து இறக்கி உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் இறந்து போனார் என உறுதிப்படுத்தினார்கள். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி சுபத்ரா கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்துபோன முருகேசனுக்கு. 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!