செங்கத்தில் பழுதடைந்த மின் கம்பத்தால் விபத்து நிகழும் அபாயம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பழுதடைந்த நிலையிலுள்ள மின் கம்பத்தால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் கிராம ஊராட்சியில் பெரும்பட்டம் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பம் மீது வாகனம் மோதியதால், இந்த மின் கம்பம் பழுதடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. மேல்புழுதியூா் பகுதியில் பலத்த காற்று வீசும்போது இந்த மின் கம்பம் கீழே விழுந்து விபத்து நிகழும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை அந்த இடத்தில் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இதேபோல, செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை, கீழ்காவாக்கரை பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள இரண்டு மின் கம்பங்கள், செங்கம் டவுன் துக்காப்பேட்டை 5 வது தெருவில் பாழடைந்த நிலையில் மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது . இப்போதும் இந்த மின் கம்பங்கள் மாற்ற மின் வாரிய அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்