Home செய்திகள் தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டாமல் சரியாக திட்டமிட்டு கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் – ஆசிரியர்கள் நலன்களை காத்திடும் வகையில் , அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு உறுதிபடுத்தி 10 ஆம் வகுப்பு தேர்வினை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி- ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டாமல் சரியாக திட்டமிட்டு கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் – ஆசிரியர்கள் நலன்களை காத்திடும் வகையில் , அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு உறுதிபடுத்தி 10 ஆம் வகுப்பு தேர்வினை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி- ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..

by Askar

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதன் முக்கியத்துவத்தையும் தேர்வு நடத்தப்படவேண்டும் என்ற அரசின் முடிவை நாங்கள் ஏற்று பணியாற்ற தயாராக உள்ளோம்.

ஆனால் தற்போது கோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தச்சூழலில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்  முதலமைச்சர்  அறிவித்துள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் 12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை என்ற நிலையில் 31.05.2020 வரை ஊரடங்கில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களை எவ்வித பயிற்சியுமின்றி 68 நாட்கள் கழித்து நேரடியாக தேர்வு எழுத நேர்கிற கடினமான சூழ்நிலையினையும் கருத்தில் கொண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் (Special Center) ஏற்படுத்தப்பட்டு அங்கு தேர்வு பணி மேற்கொள்பவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கி தேர்வினை நடத்திடுவது என்ற செய்தி உளவியல் ரீதியாக ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டும்,அனைத்து கட்சி தலைவர்கள்,மாநிலத்தின் சிறந்த கல்வியாளர்கள்,பெற்றோர்கள் என எல்லோர் தரப்பினரின் நியாயமான நேர்மையான கோரிக்கையை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கிற சுமார் 8 லட்சம் மாணவர் நலன் கருதி வருகிற ஜூன் முதல் தேதியிலிருந்து நடத்திடுவது மாணவர்களுக்கும் – பெற்றோர்களுக்கும் உகந்ததாக இருக்காது என்பதனை கருத்தில் கொண்டும் தேர்வு தேதிகளை மறுபரிசீலனை செய்திட மீண்டும் வேண்டுகிறோம்.

சி. பி எஸ் .இல் பயிலும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ஜூலை மாதம் நடுத்திடுவதாக அறிவித்துள்ளது , தமிழக அரசின் உயர்கல்வித்துறை பரவும் நோய்த் தொற்றைப் காரணம் காட்டி அனைத்து தேர்வுகளையும் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது அகில இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் தற்போதைய நிலையில் தேர்தல் அறிவிக்கப் படவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே போன்று தமிழக அரசு தேர்வு நடத்துவதில் அவசரம் காட்டாமல் சரியாக திட்டமிட்டுகோவிட் – 19 வைரஸ் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் – ஆசிரியர்கள் நலன்களை காத்திடும் வகையில் , அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு உறுதிபடுத்தி 10 ஆம் வகுப்பு தேர்வினை நடத்திட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி- ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசைமீண்டும் வலியுறுத்தி வேண்டுகிறோம்.

தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு இதுபோன்ற நிலையை எடுத்துள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த சூழலுக்கு இடமளிக்காத வகையில் தமிழக அரசு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பொதுத் தேர்வு நடத்த வெளியிட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசுக்கு நீண்ட விரிவான வேண்டுகோளை எங்களது அமைப்பு விடுத்து உள்ளது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம.

இவண் Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட் பொதுச்செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!