Home செய்திகள் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளம் காக்கும் அய்யலூர் பேரூராட்சி!

மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளம் காக்கும் அய்யலூர் பேரூராட்சி!

by mohan

மழையின்மையின் காரணமாக அழிந்துவரும் மரவகைகளை மீண்டும் உருவாக்க வேண்டியதின் பொருட்டு அய்யலூர் பேரூராட்சி நிர்வாகம் தமது எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு மற்ற பேரூராட்சிகளுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியத்தில் உள்ள இரண்டு பேரூராட்சிகளில் அய்யலூர் பேரூராட்சி இயற்கை வளங்கள் நிரம்பப்பெற்ற பேரூராட்சியாகும். சுற்றிலும் மலைகளும் சிற்றோடைகளும், ஆறுகளும், நீர்த்தேக்கங்களும் சூழ்ந்த பகுதியாக இருந்த போதிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக மழை இல்லாததாலும் அதனால் ஏற்பட்ட வெப்ப மிகுதி காரணமாகவும் பெரும்பாலான மரங்கள் அழிவின் விழிம்பில் இருந்து வருகின்றன. அதோடு அவை பொதுமக்களால் விறகுக்காகவும் எடுத்துச் செல்லப்படுகின்ற சூழல் நிலவுவதால் இப்பகுதியில் வறட்சியின் தாண்டவம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு மரம் வளர்ப்பதிலும் சுற்றுச்சூழலை காப்பதிலும் தனி அக்கறை கொண்ட பேரூராட்சி நிர்வாகம் நகரின் முக்கியப் பகுதிகளிலும் சாலையோரங்களிலும் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். நடுவதோடு நில்லாமல் அதற்கு முறையாய் நீருற்றி பராமரித்து வரும் வேலையையும் செய்வதால் பொதுமக்களின் பாராட்டு குவிந்து வருகிறது. அய்யலூர் ரயில்வே கேட்டிலிருந்து முத்துநாயக்கன்பட்டி வரைக்குமான இடையே உள்ள சாலை ஓரத்தினில் பூவரசு, வேம்பு, புங்கை உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

பேரூராட்சி செயல் அலுவலர் முகமதுயூசுப், மோகன், குமார், சுந்தரம் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சி பணியாளர்களும் உடனிருந்தனர். ••

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!