Home செய்திகள் கொரோனா விஸ்வரூபம் ; மதுரை, தோப்பூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

கொரோனா விஸ்வரூபம் ; மதுரை, தோப்பூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

by mohan

மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று மட்டும் ஒரே நாளில் 150 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப் பட்டு உள்ளது.மதுரை மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்றே நாட்களில் 216 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.மதுரை மாவட்டத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு அரசினர் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் மொத்தம் 500 படுக்கைகள் உள்ளன. இதில் 350 படுக்கைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன.தோப்பூர் காசநோய் மருத்துவமனையில்150 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால் இங்கு 80 படுக்கைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன.எனவே மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி மற்றும் காமராசர் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி ஆகிய பகுதிகளில் 4000 படுக்கை வசதிகளுடன் உடைய பிரத்யேக கொரோனா வார்டுகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மதுரை பல்நோக்கு மருத்துவமனை மற்றும் தோப்பூர் அரசு காசநோய் ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை தலா 100 வீதம் என்கிற அளவில் எண்ணிக்கை மேலும் ஒரு என்கிற அளவில் உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.மதுரை ரயில்வே ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இதுதவிர திருமங்கலம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தாலுகா ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.மதுரை மாவட்டத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு அரசினர் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இங்கு நோய் குணமாகி வீடு திரும்புவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் நோய் தாக்கத்திற்கு ஆட்பட்டு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!