Home செய்திகள் மனித நேயத்தின் மாண்பு காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்…..

மனித நேயத்தின் மாண்பு காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்…..

by ஆசிரியர்

கடந்த 16ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவ வலி காரணமாக ஆட்டோவில் இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றார்.

அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இது சூட்டினால் ஏற்பட்ட வலி என்று கூறி சிகிச்சை அளித்து அனுப்பினார். அவரை ஊரிலிருந்து அழைத்து வந்த ஆட்டோ இவர்கள் பிரசவத்திற்காக வந்தவர்கள் என்று மருத்துவமனையில் விட்டுவிட்டு அவர் ஊர் திரும்பி விட்டார். அந்தப் பெண் நீண்ட நேரம் ஆட்டோவிற்காக அரசு மருத்துவமனை அருகில் அமர்ந்திருந்தார்கள் ஆட்டோ கிடைக்காத காரணத்தினால் திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் வசந்தகுமாரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். அவர் உடனடியாக இராமநாதபுரம் B-1 காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தங்கம் முனியசாமி தொடர்பு கொண்டு சம்பவத்தை எடுத்துக் கூறினார்.

உடனடியாக வசந்தகுமார் அங்குள்ள பீட் கவலர் முத்துக்குமாரிடம் விஷயத்தை சொல்லி ஆட்டோவை தேட சொல்லி  ஒரு ஆட்டோவை பிடித்து அந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை ரெகுநாதபுரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மனிதநேயமிக்க காவலர்களின் சேவையை அறிந்து அனைவரும் போற்றி வருகிறார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!