Home செய்திகள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி தொடங்கியது..

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி தொடங்கியது..

by Askar

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி தொடங்கியது..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வருவாய் தீர்வாய் அலுவலரும் திண்டுக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையில் துவங்கியது. நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் மனுக்கள் மனுக்கள் பெறப்பட்டது மனுக்கள் மீதான விசாரணை வருவாய் தீர்வாய் அலுவலர் பால்பாண்டி விசாரணை செய்தார் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில்‌ நரியூத்து, கோட்டூர், பச்சமலையான் கோட்டை, நிலக்கோட்டை, கோடாங்கி நாயக்கன்பட்டி, நக்க லூத்து, சிலுக்குவார் பட்டி, நூத்துலாபுரம், சின்னம நாயக்கன் கோட்டை, ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது இதில் வீட்டுமனை பட்டா பிரச்சனை நிலம் தொடர்பான பிரச்சனை பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டது. வருவாய் அதிகாரிகள் மீனாட்சி பாலகுருநாதன் கிராம நிர்வாக அலுவலர்கள் கலா, ராமமூர்த்தி, பாலமுருகன், சர்ப்ராஸ் நவாஸ், முத்து பாண்டி, சிவக்குமார், மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!