Home செய்திகள் ராமநாதபுரத்தில் மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !

ராமநாதபுரத்தில் மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !

by Baker BAker

இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தார். உலகளவில் போதைப் பொருளின் பயன்பாட்டை தடுத்து நிறுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. . அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால் உண்டாகும் தீமைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இப்பேரணியில் NCC, NSS, ரெட் கிராஸ், இராஜா மேல்நிலைப்பள்ளி, செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி, டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி. ஸ்வாட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இன்பன்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி, செய்யதம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 1300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டபடி சென்றனர். இப்பேரணியானது அரண்மனை முன்பாக துவங்கி, அரண்மனை மணிக்கூண்டு வழியாக அரசு மகளிர் கலை கல்லூரியைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் ,உதவி ஆணையர் (கலால்) சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா , வட்டாட்சியர் சாமிநாதன், கோட்ட கள அலுவலர் முருகேசன் , உதவி மேலாளர் பரமசிவம் , அலுவலக மேலாளர் முருகவேல் , மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com