Home செய்திகள் எச்சரிக்கையை மீறி தூத்துக்குடி துறைமுகத்திற்குள் 14 சீனர்கள்அனுமதி.!

எச்சரிக்கையை மீறி தூத்துக்குடி துறைமுகத்திற்குள் 14 சீனர்கள்அனுமதி.!

by Askar

எச்சரிக்கையை மீறி தூத்துக்குடி துறைமுகத்திற்குள் 14 சீனர்கள்அனுமதி.!

 மாலுமி உள்ளிட்ட சீனர்கள் 14 பேருடன் சரக்கு கப்பல் துாத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது.

மத்திய கப்பல்துறையின் எச்சரிக்கையையும் மீறி துாத்துக்குடி வ.உ.சி.,துறைமுக அதிகாரிகள் சீனர்களை அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தையே மிரளச்செய்துள்ளது. எனவே இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை. சீனாவிற்கு சென்று திரும்பும் இந்தியர்களை தனிமைப்படுத்தி வைரஸ் பாதிப்பு உள்ளதா என சில தினங்கள் ஆய்வுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பீதியில் உள்ள சூழலில் சீனர்கள் 14 பேர்களை கொண்ட பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ‛ரூ யி’ தற்போது துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்சார காற்றாலைக்கான உபகரணங்களை ஏற்றிவந்துள்ள சரக்கு கப்பல் ஜனவரி 15ம் தேதி சீனாவின் ஷியாமென் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. 19ம் தேதி சீனாவின் ஷாங்காய், ஜன.,28 ல் தாய்ஹாங் துறைமுகங்களுக்கு சென்றுவந்துள்ளது. கப்பலின் மாலுமி வாங்க் லியாங்மிங் உள்பட சீனர்கள் 14 பேரும், மியான்மர் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் கப்பலில் வந்துள்ளனர். கடந்த 13 ம் தேதி சரக்கு கப்பல் துாத்துக்குடி துறைமுகத்திற்குள் வந்துள்ளது. இதனிடையே மத்திய கப்பல்துறையின் துறைமுக இயக்குநர் அரவிந்த் சவுத்ரி கடந்த 11ம் தேதியிட்ட ஒரு எச்சரிக்கை சுற்றறிக்கையை இந்தியாவின் அனைத்து துறைமுகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதில், சீனாவிற்கு ஜனவரி 15ம் தேதியோ அதற்கு பிறகோ சென்று வரும் கப்பல்ஊழியர்களையோ, சீன நாட்டினரையோ எந்த துறைமுகத்திலும் நிறுத்துவதற்ககோ, கப்பலில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்ககூடாது. இந்த உத்தரவு இந்தியாவின் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களும், சென்னை எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார். அவரது உத்தரவு 11ம் தேதி வந்தும் கூட அதற்கு பிறகு பிப்.,13ல் சீனர்கள் 14 பேருடன் கூடிய சரக்கு கப்பலை துாத்துக்குடி துறைமுகத்திற்குள் அனுமதித்துள்ளனர். துறைமுக அதிகாரிகளின் இந்த மெத்தன போக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக சரக்குகள் இறக்க சில நாட்கள் ஆகும் பட்சத்தில் கப்பல் மாலுமி உள்ளிட்ட பணியாளர்கள் துாத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு, சாயர்புரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்டவற்றை சுற்றுபார்க்க தனி வாகனங்களில் சென்றுவருவார்கள். தற்போது வந்துள்ள சீனர்கள் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்களா என்பது குறித்தும் துறைமுக அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

இதுகுறித்து துாத்துக்குடி வ.உ.சி.,துறைமுக பொறுப்பாளர்களிடம் கேட்டபோதும், மழுப்பலான பதிலையே தெரிவித்தனர். உயிர்கொல்லும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்புநடவடிக்கைளை எடுத்துள்ள சூழலில் மத்திய அரசின் வ.உ.சி.,துறைமுகத்தினரின் பொறுப்பற்ற செயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!