Home செய்திகள் இராமநாதபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு ..

இராமநாதபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம், பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் 2019-20 கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு தமிழக பள்ளி வாகனங்களின் சிறப்பு விதி -2012 ன் அடிப்படையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் வட்டார போக்குவரத்து துறையினரால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்; குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 473 பள்ளி வாகனங்களின் தரம் குறித்து தணிக்கை செய்யும் பணிகள் முதல் நடைபெறுகிறது.ஆய்வின் போது வாகனங்களின் பிரேக் திறன், டயர்கள் நிலை, அவசரகால கதவு பொருத்தப்பட்டு  சரியான முறையில் இயங்குகிறதா, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள் குழந்தைகள் சிரமமின்றி ஏறி, இறங்க ஏதுவாக குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டு தரமான நிலையில் உள்ளதா, டிரைவர் கேபின் இருக்கைகள், இருக்கையின் கீழ்புறம் பள்ளி குழந்தைகளின் பைகளை வைப்பதற்கான ரேக்குகள், வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை நல்ல நிலையில் உள்ளதாää ஜன்னல்கள், ஜன்னல்களுடைய கிரில்கள், சிவப்பு மற்றும் வெள்ளை பிரதிபலிப்பான், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள், தீயணைப்பு கருவி, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் குறைபாடு கண்டறியப்படும் பட்சத்தில் அதனை சரிசெய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு, பள்ளி திறப்பதற்கு முன் மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து சான்று பெற்ற பின்பு தான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார்.  தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு கருவிகளை இயக்குதல் உள்ளிட்ட அவசர கால தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

ஆய்வின் போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.செல்வகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் மா.நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ரா.இளங்கோ, ரா.மாணிக்கம், ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெ.அருளானந்து உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!