Home செய்திகள் விபத்து என கருதப்பட்ட வழக்கு.. கொலை என திருப்பம்..

விபத்து என கருதப்பட்ட வழக்கு.. கொலை என திருப்பம்..

by ஆசிரியர்

மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வருகிறார் . நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது , திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாப் பகுதியில் ரோட்டின் நடுவில் கிடந்த பெரிய கல்லில் மோதி பாஸ்கர் கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிிழந்தார்.

பூங்கா பேருந்து நிலையம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் பார்வையிட்டனர். அதில் இரவு ஒரு மணியளவில் ஒருவர் ரோட்டின் நடுவில் கல்லை வைப்பதும் அதில் பாஸ்கர் மோதிக் கீழே விழுந்ததும் அவர் சட்டைப்பையில் இருந்த கைபேசி மற்றும் பணத்தை மர்மநபர் எடுத்துச் சென்றதும் தெரிந்தது. அந்த cctv பதிவு காட்சியில் நடு ரோட்டில் இருக்கும் கல்லை எடுத்து போடுவதற்காக அந்த சாலையில் செல்பவர்கள் நின்ற போதும் அவரை இந்த நபர் விரட்டுகிறார். அடிபட்டு கீழே விழுந்தவரை காப்பாற்ற வந்தவர்கள் மிரட்டி அனுப்புகிறார் அந்த மர்ம நபர். அந்த மர்ம நபர் குறித்து திருநகர் பகுதி போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!