Home செய்திகள் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த திமுகவோடு தினகரன் கள்ள உறவு வைத்துள்ளார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு..

தேர்தலில் அதிமுகவை வீழ்த்த திமுகவோடு தினகரன் கள்ள உறவு வைத்துள்ளார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு..

by ஆசிரியர்

தேர்தலில் அதிமுகவை வீழ்த்த திமுகவோடு தினகரன் கள்ளஉறவு வைத்துள்ளார் என்றும் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்

ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்  அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஒருவாரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்  நேற்று ஓட்டப்பிடாரம்பகுதியில் உள்ள ஓசநுத்து, தருவைக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாநில இலக்கிய அணி செயலாளர் வளர்மதி, நடிகா் ஜெயக்கோவிந்தன் தலைமை கழக பேச்சாளர் வடுகபட்டிசுந்தரபாண்டியன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தில் அமைச்சர் பேசுகையில் ; உங்களுக்கு ஒரு நல்ல வேட்பாளர் மோகன் கிடைத்துள்ளார். உங்களுக்காக உழைக்கும் மோகன் அவர்கள், வளர்ச்சி திட்டங்களில் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காண்பிப்பார்.  இந்த 60ஆண்டுகளில் ஆசியாவின் 7வது பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் உள்ளது. தமிழ்நாட்டின் முதல் பணக்கார குடும்பம் கருணாநிதி குடும்பம். கோபாலபுரத்தில் பிள்ளையார் கோவிலை தவிற அனைத்து பங்களாக்களையும் விலைக்கு வாங்கிவிட்டனர். எத்தனை டிவி, எத்தனை பேப்பா், எத்தனை பினாமி சொத்துக்கள், தூத்துக்குடியில் எத்தனை பினாமி சொத்துக்கள், குடும்ப உறுப்பினர்கள் 120 பேர்கள் பெயரிலும் பினாமி சொத்துக்கள். இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கள் கருணாநிதி குடும்பத்திற்கு எப்படி வந்தது.

இன்னும் போதாது என்று மீண்டும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஸ்டாலின் கேட்டு வருகின்றார். அவர்கள் குடும்பத்திற்குள்தான் நாடு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஊழக்காக கலைக்கப்பட்ட ஆட்சி எந்த ஆட்சி என்றால் அது திமுகதான் என்று தமிழக மக்களுக்கு தெரியும். சர்காரியா கமிஷன் திமுக மீது ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டை நிருபித்தது. சென்னை, தூத்துக்குடி,திருநெல்வேலியிலிருந்து ஆளை கூட்டிவந்து திமுக வேலை பார்க்கலாம். ஆனால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது. ஓட்டப்பிடாரம் தொகுதி உட்பட 4சட்டமன்ற தொகுதியிலும் சபரீசன் தலைமையில் ஒரு கார்ப்ரேட் கம்பேனி திமுகவிற்கு தேர்தல் வேலை பார்த்து வருகின்றது. திமுக போடும் வேஷங்களை வாக்காளர்கள் நம்ப வேண்டாம். ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் என்றும் அண்ணா திமுகவின் விரும்பிகள். இரட்டை இலை சின்னத்திற்குதான் வாக்களிப்பார்கள். எழை, எளிய மக்கள் நலனில் அக்கரை கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது

குறிப்பாக மீனவ மக்களுக்காக  பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை அதிமுகவில் நுழைய முடியாத தினகரன், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை கைப்பற்ற நினைக்கின்றார். ஜெயலலிதா சிறைக்கு செல்ல ஒரு கட்சி திமுக என்று சொன்னால்,  மற்றோறுவர்  தினகரன் என்பதை யாரும் மறுக்க முடியாது. திமுக போட்ட பொய் வழக்கில் தினகரனும் இருக்கின்றார். அப்போதே திமுகவோடு தினகரன் கள்ளஉறவு வைத்துக்கொண்டு  லண்டன் ஓட்டல் வழக்கை  பிரித்து  எடுக்கின்றார்.  ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்புவதில் திமுகவோடு தினகரனும் சேர்ந்து கொண்டார். அதனால்தான்  கட்சியில் இருந்து அவரை ஜெயலலிதா விரட்டினார்.  திமுகவில் தினகரன் இருக்கின்றார். தினகரனில் திமுக உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் போட்டுக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.  இவர்களின் நாடகம் தமிழக மக்கள் மத்தியில் எடுபடாது. இன்று ஜெயலலிதா படத்தை போட்டு தினகரன் நாடகம் போடுகின்றனர்.

ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த தினகரனை தமிழக மக்கள் என்றும் மண்ணிக்க மாட்டார்கள். 18 எம்எல்ஏகளையும் நீதான்  மந்திரி,  நீதான் மந்திரி,  நீதான் முதலமைச்சா்  என்று கூறி அனைவரையும் தெருக்கோடியில் நிறுத்தி விட்டார்.  தினகரன் அணியினர் எப்போதும் பெட்டி ஞாபத்தில் இருப்பதால் பெட்டி சின்னத்தை கேட்டு வாங்கியுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் அதிமுகவினர் வேர்வையை சிந்தி வெற்றிபெற்றார். ஆனால் கட்சி நிர்வாகிகளுக்கு துரோகம் செய்துவிட்டு 25கோடியை வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட்டார். இவருக்கு மீண்டு்ம் ஓட்டுப்போட்டால் பல கோடிகளை வாங்கிக்கொண்டு எம்எல்ஏ பதவியை விற்றுவிடுவார். கோடிகளை வாங்கிக்கொண்டு ஓடிப்போன வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தலோடு திமுகவும், தினகரனும் காலியாகிவிடுவார்கள். எடப்பாடியார் ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகள் மட்டும் அல்ல அடு்த்து வரும் பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்று எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்பார். நல்ல மனிதர்கள் வாழும் கூடாரம் அண்ணா திமுகவிற்கு வாக்காளர்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று பேசினார். பிரச்சாரத்தில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!