Home செய்திகள் பரமக்குடி பகுதிகளில் தொடர்ந்து வாகனங்களை எரித்து வந்த வாலிபர் கைது..

பரமக்குடி பகுதிகளில் தொடர்ந்து வாகனங்களை எரித்து வந்த வாலிபர் கைது..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை தொடர்ந்து எரித்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடியில் இரு சக்கர வாகனங்களை திட்டமிட்டு தொடர்ந்து எரிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். துரித விசாரணையில் நெடுஞ்செழியன் மகன் கெளதம், 25 என தெரிய வந்தது. இரவு நேரங்ளில் கஞ்சாவை புகைத்து விட்டு போதையில் சுற்றித் திரியும் இவர் கஞ்சா கிடைக்காதபோது செய்வதறியாது பித்து பிடித்தவர் போல், சைகோ போல் தனது செயல்பாடுகளை மாற்றி கொள்வது உண்டு. சுற்றித் திரியும் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்சர வாகனங்களை எரிப்பதாகவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், இவர் கடந்த 2010ல் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் ரூ.1.50 லட்சம் திருடிவிட்டு விசாரணைக்கு பிறகு ஒப்பு கொண்டு பணத்தை திரும்ப ஒப்படைத்தது குறிப்பிடதக்கது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!