Home செய்திகள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் குறித்து நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம்..

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் குறித்து நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம்..

by ஆசிரியர்

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி.

இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள கண்ணன் கூறியதாவது: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசுப் பணிகளை செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மீது பாதிக்கப்படும் நபர்கள் எந்த நேரமும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை அணுகி புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக, 98433 84199, 94433 84199, 9498202089 என்ற செல்லிடப் பேசியிலும், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816, என்ற தொலைபேசியிலும், விழுப்புரம் மாவட்ட மக்கள் 04146-259216 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார் மீது உடனே விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்போர் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும். இந்தப் புகார்கள் மீது விசாரித்தே நடவடிக்கை எடுக்கப்படுவதால், பொய் புகார்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

செய்தி தொகுப்பு:– அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!