Home செய்திகள் கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளதாக வாடிப்பட்டி அருகே மாநில தலைவர் பேட்டி.

கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளதாக வாடிப்பட்டி அருகே மாநில தலைவர் பேட்டி.

by mohan

கறிக்கோழி வளர்ப்போர் விவசாய சங்கம் சார்பில் நடந்து வரும்.காலவரையற்ற தொடர் போராட்டம் காரணமாக கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளதாக வாடிப்பட்டி அருகே மாநில தலைவர் பேட்டிமதுரை மாவட்டம் சோழவந்தான்தமிழகம் முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்கப் பண்ணைகள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டதுஉள்ளதுஇவர்களுக்கு தமிழகத்தின் நாமக்கல் ஈரோடு கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து கோழி குஞ்சு உருவாக்கும் நிறுவனத்தின் மூலம் கோழிக்குஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறதுஅவ்வாறு இறக்கும் கோழி குஞ்சுகளுக்கு ஒரு கோழிக்குஞ்சுக்கு ரூபாய் ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை தற்போது வரை தரப்பட்டு வருகிறதுசமீபத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு காரணமாக தமிழகத்தில் உள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்கத்தினர் ஒரு கோழிக்குஞ்சுக்கு வளர்த்து தருவதற்கு ரூபாய் 12 முதல் 15 ரூபாய் வரை தர வேண்டும் என்றும் அதுவரை கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் கூறி கடந்த 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்இதுகுறித்து கோரிக்கை மனுவினை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து கொடுத்துள்ளனர் மேலும்.தமிழக அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார்650க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன இந்தப் பண்ணைகளில் உரிமையாளர்கள் சிலர் கடந்த ஐந்தாம் தேதி வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்திருந்தனர்இதற்கிடையில் கறி கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யும் நிறுவனத்தை சேர்ந்த சிலர் கறிக்கோழி வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் ரகசிய உடன்பாடு செய்து ரகசியமாக கோழிக்குஞ்சுகளை இறக்கி விட்டு சென்று வந்துள்ளது தெரிந்து மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்க நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நேற்று இரவு 12 மணி அளவில் கறி கோழிக் குஞ்சுகளை இறக்க வந்த வேனை முற்றுகையிட்டு திரும்பிப் போகச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர்இதனால் இருதரப்பினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது முடிவில் கறி கோழிக்குஞ்சுகளை ஏற்றிவந்த நிறுவன டிரைவர்கள் மேலாளர்கள் வேனை திருப்பி கொண்டு சென்று விட்டனர்இது குறித்து கறிக்கோழி வளர்ப்பு விவசாய சங்க மாநில தலைவர் கூறும்போதுதமிழகம் முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு விவசாய பண்ணைகள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளது மதுரை மாவட்டத்தில் மட்டும் 650 பண்ணைகள் உள்ளது கடந்த சில தினங்களாக விலைவாசி உயர்வால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது ஆகையால் இதுவரை ரூபாய் ஐந்து முதல் ஆறு ரூபாய் கொடுத்து வந்த விலையை 12 முதல் 15 ரூபாய் தரவேண்டும் என்று கோழி குஞ்சுகள் இறக்குமதி செய்யும் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லைஎங்களின் கோரிக்கை நியாயமானது ஆறு ரூபாய்க்கு ஒரு கோழி குஞ்சு வாங்கி அதை 40 நாள் பராமரிப்பதற்கு 7 முதல் 8 ரூபாய் வரை செலவு ஆகிறது ஆகையால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது ஆகையால் கறி கோழி குஞ்சு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு குஞ்சுக்கு 12 முதல் 15 ரூபாய் வரை தரவேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்தோம் ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லைஇதனால் கடந்த 4ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றோம் மேலும் இதற்கு பின்பும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் 9.5 2022 முதல் எங்களின் பண்ணையை பூட்டி சாவியை நிறுவனத்திடம் ஒப்படைக்க இருக்கிறோம்இதற்கிடையில் எங்கள் பண்ணையை சேர்ந்த சிலரிடம் ரகசிய உடன்பாடு செய்து கோழிக்குஞ்சுகளை இறக்க வந்த வேனை மறித்து திருப்பி அனுப்பி இருக்கிறோம்மேலும் இதுகுறித்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்து இருக்கிறோம் ஆகையால் அரசு எங்களை அழைத்து பேசி இதற்கு ஒரு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கூறினார்மேலும் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருவதால் அடுத்து வரும் காலங்களில் கறிக்கோழி விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் ஆகையால் இதனை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!