Home செய்திகள் நிலக்கோட்டை ஒன்றியத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கிராமசபை கூட்டத்தால் பரபரப்பு.டாஸ்மாக்கை இழுத்து மூடக் கோரி தீர்மானம்.

நிலக்கோட்டை ஒன்றியத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கிராமசபை கூட்டத்தால் பரபரப்பு.டாஸ்மாக்கை இழுத்து மூடக் கோரி தீர்மானம்.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் துணைத் தலைவர் கீதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: வறுமை இல்லாத ஊராட்சி  பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்  (கிராம ஊராட்சி) திருமலைசாமி, ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன்  உள்பட கலந்து கொண்டனர. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சமலையான் கோட்டை ஊராட்சியில் உள்ள கொத்தம்பட்டி யில் ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பச்ச மலையான்கோட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவிரி நீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வீடுகளுக்கும் காவிரி குடிநீர் திட்டம் வழங்குவதற்கான குடிநீர் இணைப்பு சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனை பொதுமக்கள் வரவேற்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் முசுவனூத்து கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முசுவனூத்து கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல் குவாரியை மூட வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக வருகிற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ் வருகிற காலங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் மத்தியில் பேசினார்.  பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதன் காரணமாக நிலக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பால முத்தையாவின் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கிருந்த போலீசார்கள் ஆத்திரத்தில் பேசிய பொதுமக்கள் மத்தியில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் ஆவேசத்தில் இருந்து அமைதி அடைந்தனர். இதன் காரணமாக சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சித்தர்கள் நத்தம் ஊராட்சியில் உள்ள மல்லியம் பட்டியில் கிராம சபை கூட்டம் முத்துலட்சுமி முத்தையாவின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சித்தர்கள் நத்தம் ஊராட்சியில் உயர்நிலைப் பள்ளியை  மேல்நிலைப் பள்ளியாக மாற்ற தேவையான அனைத்து உதவிகளையும் கிராமமக்கள் செய்து தருவதாக அளிக்கப்பட்ட உறுதியின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் துணைத்தலைவர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் விஜய கர்ணா பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர்  டாக்டர். வைகை பாலன்   தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அணைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் அரசால் அமைக்கப்பட்டுள்ள அணைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள டாஸ்மாக் நிறுவனத்தை மூட கோரி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அம்சவல்லி வீரகாமு முன்னிலை வைத்தார். கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு, அணைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் நிறுவனத்தை இழுத்து மூடக் கோரியும், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சின்னசாமி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விளாம்பட்டி  ஊராட்சி மன்ற தலைவர் கிழவர் ராஜா தலைமையிலும் துணைத் தலைவர் சோபனா முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகளிர் மற்றும் சமுதாயப் பணிகள் ஆற்றிட உள்ள அனைத்து நபர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் சோபனா அழகுமுருகன், ஊராட்சி செயலாளர் சின்னன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.எத்திலோடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி திருப்பதி தலைமையிலும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் காமாட்சி முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகளிர் மேம்பாடு மகளிர் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தின் முடிவில் ஊராட்சி சின்னன் நன்றி தெரிவித்தார். இதே போன்று கிராம அனைத்து  ஊராட்சிகளில் கிராமங்கள் மேம்பட வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கூவனூத்து  ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் கிராம சபைக்கூட்டம் கே. குரும்பபட்டியில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடவாக்குறிச்சி நீர்ப்பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில்  விவசாயிகள் கலந்துகொண்டு வைகை ஆற்றுப்படுகையில் புதிதாக நூத்துலாபுரம் , முசுவனுத்து, கூவனூத்து உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாய நிலங்கள் பயன்பெறும் விதமாக புதிய கிளை வாய்க்கால் வெட்ட அரசுக்கு அரசுக்கு கொண்டுசெல்ல தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் விவசாயிகளின் , பொதுமக்களின் பயன்பாடு கருதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்றது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!