Home செய்திகள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடியரசுதினவிழா.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடியரசுதினவிழா.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு உள்ள கம்பத்தில் தேசியக் கொடியை நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ் கொடி ஏற்றிவைத்து குடியரசு தின விழா கொண்டாடினார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை செயல் அலுவலர் சுந்தரி தேசியக் கொடியை ஏற்றிவைத்து குடியரசு தினத்தை கொண்டாடி இனிப்புகள் வழங்கினார். நிலக்கோட்டை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் கோகுல் நாத் பேரூராட்சி பகுதிகளில் சுமார் 10 இடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு கம்பங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். நிலக்கோட்டை கே சி எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிலக்கோட்டை எச்.என்.யூ.பி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் ஞானவேல் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடினார்கள். எச்.என்.யு.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகக்குழு உறுப்பினர் மரியண வேல் தேசியக் கொடியை ஏற்றினார்.நாடார் உயர்நிலைப் பள்ளியில் நிர்வாகக் குழு உறுப்பினர் அண்ணலங்கோ தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிலக்கோட்டை நாடார் நடுநிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். . நிலக்கோட்டை கரும்புச்சாலை குடியிருப்பு சங்க தலைவர் கருப்பையா தலைமையிலும், செயலாளர் ஜோசப் முன்னிலையிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் தலைமையாசிரியர் பிச்சை நாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்திய தொழிற்சங்கம் சார்பாக கொடி கம்பத்தில் மாவட்ட செயலாளர் சாதிக் அலி கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!