தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி. மூர்த்தி இன்று பங்கேற்பதாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதால் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவா் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.