ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பின் மாநில உயர்மட்ட குழு.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மு.சா.சிங்கத்தமிழச்சி தலைமையில்சென்னை திருமுல்லைவாயல் கிரீன் ஃபீல்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில செயலாளர் வழக்கறிஞர் நா.சரவணன் மற்றும் பொருளாளர் எம்.ஆமோஸ் என்ற முருகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்;அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் அமைப்பை எப்படி வழி நடத்துவது என்பதையும் எதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் உயர்மட்டக்குழு மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் வாயிலாக கீழ்க்கண்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.கூட்டமைப்பின் வரலாறு அதன் தொன்மையும் அதன் தற்போதைய முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.மக்களின் பிரச்சினைகள் சார்பாக கூட்டமைப்பின் செயல்பாடுகளும். நிர்வாக ரீதியலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மக்கள் பிரச்சினைகளை களைய கூட்டமைப்பில் உள்ள அணிகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.