பாலமேடு ஜல்லிக்கட்டு தொடக்கம்.

மதுரை அருகே பாலமேட்டில், ஜல்லிக்கட்டை, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.பாலமேட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை மடக்கி பரிசுகளை பெற்றுச் சென்றனர்.விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply