நண்பர்களோடு கம்மாய் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பெரியசாமி ஆகியோரது கடைசி மகன் கண்ணன் (வயது 28) என்கிற இளைஞர் இன்று காலை நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்தார். இந்த நிலையில் கண்ணன் நண்பர்களுடன் விளையாடி நீச்சல் அடித்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கண்ணன் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து மதுரை பொறுப்பு நிலைய அலுவலர் தயாளக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறை குழுவினருடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்களின் நீரில் மூழ்கியதாக கூறப்படும் கண்ணனை மூன்று மணி நேரமாக தேடி உடலை மீட்டனர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply